சென்னை: சென்னை விமான நிலையத்தில் விமானிகள், பொறியாளர்கள் திடீர் விடுப்பு எடுத்ததால், விமானிகள் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மதுரை, மும்பை ஆகிய 5 விமான சேவைகள் ரத்து ஆகியதோடு இலங்கை, அந்தமான், கோழிக்கோடு, கொல்கத்தா, ஹைதராபாத், திருச்சி, மதுரை, கோவா, மும்பை உள்ளிட்ட 9 விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாகி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னையில் இருந்து இன்று (செப்.18) அதிகாலை 3 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 10:20 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம், இரவு 8 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து, இன்று பகல் 1:30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம், இரவு 7 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு ஒரே நாளில் மொத்தம் 5 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 6 முதல் 9 வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு திறனறிவுத் தேர்வு! பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு என்ன?
அதைப்போல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இலங்கை, அந்தமான், கோழிக்கோடு, கொல்கத்தா, ஹைதராபாத், திருச்சி, மதுரை, கோவா, மும்பை ஆகிய 9 விமானங்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக, தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இந்நிலையில், இந்த விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களுக்கு என்ன காரணம் என்பது குறித்து, விமான நிறுவனங்கள் தற்போதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால் இன்று விமானிகள் மற்றும் விமான பொறியாளர்கள் சிலர் திடீரென விடுப்பு எடுத்து விட்டதாகவும், அதனால் விமானங்களை இயக்க விமானிகள் இல்லாத காரணத்தால், திடீரென ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: "சிறைச்சாலை தண்டனைக் கூடம் அல்ல.. ஞானம் தரக்கூடிய இடம்" - அமைச்சர் துரைமுருகன்!