ETV Bharat / state

திண்டுக்கல் அருகே 5 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்; 3 பேர் கைது!

திண்டுக்கல் அருகே வேட்டைக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், மூவரை கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்

author img

By

Published : Jan 5, 2022, 6:59 AM IST

திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் நான்கு காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் தலைமையில் மொத்தம் 125 பேர் கொண்ட தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சாணார்பட்டி சார்பு ஆய்வாளர்கள் சேகர், பவுல்ராஜ் தலைமையில் கவராயன்குளம், தவசிமடை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஏர்கன், 3 எஸ்பிபிஎல் துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. துக்கலில் ஈடுபட்டோர் மீது சாணார்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பேசுகையில், “சிறுமலை, நத்தம், சாணார்பட்டி தாலுகாக்களில் உள்ள கள்ளத்துப்பாக்கி உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்

மலைக்கிராமங்களில் துப்பாக்கிகள் வைத்திருப்போர் தாங்களாக முன்வந்து ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: Rowdy Baby Surya: ரவுடி பேபி சூர்யா யூ-ட்யூப் சேனலை முடக்குவதற்கு காவல் துறை நடவடிக்கை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.