ETV Bharat / state

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது!

சென்னை: சுங்குவார்சத்திரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

five-people-have-been-arrested-in-connection-with-the-murder-of-a-real-estate-tycoon

author img

By

Published : Sep 9, 2020, 3:11 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயராமன். அவரது சொத்திற்கு ஆசைப்பட்ட இரண்டாவது மனைவியின் மகன் விக்னேஷ், கூலிப்படையை வைத்து ஜெயராமனை கொலை செய்தார். இதில் முக்கிய குற்றவாளியான விக்னேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு சொகுசு கார்களில் ஜெயராமனை கொலை செய்துவிட்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார், முத்துக்குமார், அஸ்வின், வெங்கட், விக்கி ஆகிய ஐந்து பேர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேம்குமார் மீது, ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆறு மாதங்களுக்கு முன்பே விக்கேஷ் தனது தந்தையைக் கொலை செய்வதற்காக பிரேம்குமாரிடம் குறிப்பிட்ட ஒரு தொகையை வழங்கி இருந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:அரசு மதுபானக் கடையில் கொள்ளையடிக்கும் ஊழியர்கள் - மதுப்பிரியர்கள் தகராறு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.