தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ' அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வெயிலின் அளவானது தோராயமாக 31 டிகிரியிலிருந்து 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகர்ப் பகுதியில் ஆங்காங்கே சாதாரண முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: வீடுகளுக்குள் புகுந்துள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதி!