ETV Bharat / state

எந்த மூவிக்கு போகலாம்ன்னு பிளான் போட்டுருக்கீங்க? இந்த வாரம் ரிலீஸ்ஸில் 5 படங்கள்! - முத்து

Tamil Cinema: தமிழ் சினிமாவில் இந்த வாரம் நானி நடித்த ஹாய் நான்னா, காளிதாஸ் ஜெயராம் நடித்த அவள் பெயர் ரஜ்னி, இ.வி. கணேஷ் பாபு நடித்த கட்டில், சதீஷ் நடித்த காஞ்ஜூரிங் கண்ணப்பன், நவரச நாயகன் கார்த்திக் நடித்த தீ இவன் ஆகிய 5 படங்கள் நாளை (டிச.8) ரிலீஸ் ஆக உள்ளன.

Tamil Cinema
இந்த வாரம் ரிலீஸ்ஸில் 5 படங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 5:05 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல் இந்த வாரமும் ஏகப்பட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்த வாரம் மொத்தம் இன்று 5 படங்கள் வெளியாக உள்ளன. இன்று ஹாய் நான்னா படம் வெளியாகி உள்ளது.

ஹாய் நான்னா: ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் ஹாய் நான்னா. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார். இப்படம் இன்று (டிச.7) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

கட்டில்: இ.வி.கணேஷ்பாபு நடித்து இயக்கியுள்ள திரைப்படம் கட்டில். இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்கள் எழுதி உள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே, பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று, பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்ஜூரிங் கண்ணப்பன்: அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள திரைப்படம் காஞ்ஜூரிங் கண்ணப்பன். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தபடம் நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரெஜினா, நாசர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை ( டிச.8) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அவள் பெயர் ரஜ்னி: வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ஜான், சைஜு குருப் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் துப்பறியும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படம் நாளை (டிச.8) தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது.

தீ இவன்: நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வரும் படம் ‘தீ இவன்’. மனிதன் சினி ஆட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரித்து, ஜெயமுருகன் T. M கதை, இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் சன்னி லியோன், கார்த்திகை தீபம் புகழ் அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சரவண சக்தி, ஹேமந்த், ஸ்ரீதர், சாரப்பாம்பு சுப்புராஜ், கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படமும் நாளை( டிச.8) திரையரங்குகளில் வெளியாகிறது.

ரீ ரிலிஸ்: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படமும், நடிகர் ரஜினிகாந்த் இயக்கத்தில் முத்து திரைப்படம் ஆகிய இரு திரைப்படங்களும் நாளை ரீ ரிலீஸ் ஆக உள்ளன.

இதையும் படிங்க: சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.. முதலமைச்சருடன் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.