சென்னை: கொருக்குப்பேட்டை அண்ணா நகர் நாவலர் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரது வீட்டில் கடந்த மே 10ஆம் தேதி செல்போன் காணாமல் போனதாக ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் நள்ளிரவில் தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு, காலையில் எழுந்து பார்க்கும்போது செல்போன் திருடப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
சிசிடிவியில் சிக்கிய திருட்டு கும்பல்:
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆர்கே நகர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத மூன்று பேர் ராஜாவின் வீட்டில் நுழைந்து செல்போன் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட விஜய், முஹம்மது, இத்ரீஸ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்த இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு:
மேலும், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மொட்டை கார்த்தி, ராசிக், ஆசி ஆகிய மூவரையும் காவல் துறையினர் தேடி வந்த நிலையில் ஜூன் 29ஆம் தேதி அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை, ஐந்து பேர் மீதும் வடசென்னை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பூட்டை உடைத்து பணம் கொள்ளை