சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சமூக விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “கரோனா பாதிப்பு முதல் கட்டத்தில் இருந்து இராண்டாவது கட்டத்திற்கு சென்றுவிட்டது. மக்கள் முழுமையாக ஒத்துளைப்பு தந்தால் மட்டும் தான் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து 14ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் தலைமையிலான முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தான் முடிவெடுக்கப்படும்” என்றார்.
மேலும், “மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் தடை காலத்தைக் குறைப்பது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதுமட்டுமின்றி மத்திய அமைச்சருக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளேன். அனைத்து கடலோர மாநில அரசுகளின் ஒருமித்த கருத்துகளைப் பொறுத்தே முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!