ETV Bharat / state

110 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்

சென்னை: 110 நாள்களாக வாழ்வாதாரம் இல்லாமல் மீன்பிடித்தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்றதால் காசிமேடு களைகட்டியுள்ளது.

fisherman-got-into-the-sea-after-110-days

author img

By

Published : Jul 16, 2020, 9:59 AM IST

சென்னை காசிமேட்டில் ஊரடங்கு உத்தரவினால் 110 நாள்களாக பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் ஊரடங்கை கடைபிடித்தனர். இந்நிலையில், மீன்பிடி தடை காலம் நிறைவு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு அனுமதியளித்தது.

ஆனால் கடலில் பிடித்து வரும் மீன்களை விற்பதற்கு காவல் துறையினர் கெடுபிடி விதித்ததால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர். பெரிய விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பதற்கு ஏற்பாடு செய்தால் மட்டுமே மீன்களைப் பிடிக்க கடலுக்கு செல்வோம் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து 110 நாள்களாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவர்கள் மீன்வளத் துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 15) இரவு முதல் குறைந்த அளவு படகுகள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் பிடித்துவரும் மீன்களை தகுந்த இடைவெளியுடன் விற்பனை செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதித்த பின்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 110 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

110 நாள்களாக வாழ்வாதாரம் இல்லாமல் மீன்பிடித்தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்றதால் காசிமேடு களைகட்டியுள்ளது.

இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையத்தை ஆட்சியர் திறக்கலாம் - அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.