ETV Bharat / state

மீன்கள் ருசியானவை... மீனவர்களின் வாழ்க்கை...? - மீனவர்கள் படும் பாடு

சென்னை: மீன்பிடித் தடைக்காலம் மற்றும் வானிலை மையத் தடைக்காலங்களில் மீனவர்கள் சந்திக்கும் இழப்புகளை அரசு என்று தான் சரிசெய்யப்போகிறதோ என்று வேதனை தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.

fisherman
மீன்கள் ருசியானவை...மீனவர் வாழ்க்கை
author img

By

Published : Dec 4, 2019, 4:39 PM IST

கோடைக் காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் வரை மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருவாயற்ற அந்தக் காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், வலை பின்னுதல், படகுகளைப் பழுது பார்த்தல் உள்ளிட்ட தங்கள் தொழில் சார்ந்த மற்ற வேலைகளைச் செய்து வருவர்.

இக்கால கட்டத்தில், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசால் வழங்கப்படும் இதுபோன்ற உதவித்தொகைகள் மீனவர்களுக்குச் சற்று ஆறுதலாக இருக்கிறது என்றாலும், அவை போதுமானவையாக இல்லை என மீனவர்கள் புலம்புகின்றனர்.

மீன்கள் ருசியானவை...மீனவர் வாழ்க்கை...?

அதேபோல் புயல், மழைக்காலங்களில் வானிலை மைய எச்சரிக்கையால் மீனவர்கள் பல நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவதில்லை. மீன்பிடித் தடைக்காலத்தை விட அதிக நாட்கள் வேலையிழக்கும் மழைக் காலத் தடைக்கான இழப்பீட்டை அரசு தங்களுக்கு வழங்குவதில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கர்ணா என்ற மீனவர் கூறுகையில், "வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மீறி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் போது அரசு அதற்கான பொறுப்பை ஏற்பதில்லை. மழைக் காலங்களில் இது போன்ற எச்சரிக்கை அறிவிப்புகள் வாரம் ஒருமுறையாவது வருவதால், 40 நாட்களுக்கும் மேலாக வாழ்நிலை பாதிக்கப்படுகிறது" என்றார்.

மீனவர் கர்ணா

முருகன் என்ற மற்றொரு மீனவர் இதுகுறித்து கூறுகையில், "இதுபோல கடலுக்குச் செல்லமுடியாத காலங்களில் வட்டிக்குக் கடன் பெற்றே குடும்பத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, மழைக் காலத் தடை நாட்களையும் கணக்கில் கொண்டு அரசு உதவித்தொகை வழங்கினால், பட்டினியின்றி வாழ வழி ஏற்படும்" என்கின்றனர்.

மீனவர் முருகன்

'ஒருநாள் போவார் ஒருநாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்... ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை, ஊரார் நினைப்பது சுலபம்' என்கிறது திரைப்பாடல். ஊரார் சுலபமாக நினைக்கலாம்... அரசு அப்படி நினைக்கலாமா என்பதே, இழப்பீடு இன்றித் தவிக்கும் மீனவர்களின் கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க: கடலாடிகளின் போராட்டங்கள் நெஞ்சுரத்தைத் தருபவை - இன்று உலக மீனவர்கள் தினம்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 04.12.19

வானிலை மாற்றங்களினால் வருடத்தில் 30 நாட்களுக்கும் மேலாக வேலை இழக்கிறோம்.. அரசின் உதவித்தொகை கோரும் மீனவர்கள்.. சிறப்பு செய்தித் தொகுப்பு..

கோடை காலத்தில் கடலில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக குறிப்பிட்ட சில நாட்கள் மீன் பிடிக்க தடைக் காலமாக அறிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதில்லை.. இக்காலகட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். இது போன்ற காலகட்டத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை என்பது மீனவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கின்றது. ஆனால் மீன் பிடி தடை காலத்தை விட அதிகப்படியான நாட்கள் மழை காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மினவர்களுக்கான எச்சரிக்கையாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையில் அடிக்கடி அறிவுறுத்தப்படும் போது, மீனவர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல இயலாமல் போய்விடும். அப்படி எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் அரசு அதற்காக பொறுப்பேற்காது.

எனவே, வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்படும் எச்சரிக்கை காலங்களில் மீனவர்கள் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் இருப்பதுடன் அதுபோன்ற நாட்களில் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது என்கின்றனர் பட்டிணப்பாக்கம் பகுதி பைபர் படகு மற்றும் கட்டுமரம் படகு மீனவர்கள்.. மேலும், இது போன்ற அறிவிப்புகள் வாரத்தில் ஒரு முறையேனும் இருக்கும். இவை மழை காலங்களில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் குறைந்தது 30 நாட்களுக்கு மேல் எங்கள் வாழ்கை நிலை பாதிக்கப்படும். அதுபோன்ற நேரத்தில் கடன் அல்லது வட்டிக்கடன் பெற்று சாப்பாடு செய்யும் நிலையில் தான் நாங்கள் உள்ளோம் என்கின்றனர்.
எனவே, இதுபோன்ற நாட்களை கணக்கில் கொண்டு அந்த நாட்களுக்கும் அரசின் சார்பில் ஏதேனும் உதவித்தொகை வழங்கப்பட்டால் ஏழை மீனவர்களான நாங்கள் பட்டினியின்றி வாழ வழி ஏற்படும் என்கின்றனர் ஒட்டுமொத்தமாக..

வருடத்தில் சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்கள் வானிலை பாதிப்புகளினால் வேலை இழக்கும் மீனவர்கள் அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அரசு உதவித்தொகை வழங்கிடக் கோருவதில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது..

tn_che_01_special_story_of_fishermen_issues_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.