ETV Bharat / state

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பா? - அரசு பள்ளி மாணவர்கள்

சென்னை: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 18) நடைபெற்றுவருகிறது.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பா

author img

By

Published : Jun 18, 2021, 2:28 PM IST

பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே சேர்ந்துவந்தனர். இதனை நிவர்த்திசெய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் 443 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்தனர்.

இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்கள் பொறியியல், கால்நடை, மீன்வளம், சட்டம் வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருபவர்களில் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்துவருகிறது.

இவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்குக் கோரிக்கைவைத்தனர். அதனை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடைத் துறை, சட்டத் துறை ஆகியவற்றின் அரசு செயலர்கள் உறுப்பினர்களாக நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் தொழிற்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்கள் குழுவிற்கு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தொழில்நுட்ப படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பரிந்துரை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அவ்வாறு இந்தக் குழு பரிந்துரை அளித்தால் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதுபோல் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிங்க: தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆராயும் ஆணையத்தின் முதல் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.