சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். அவரது மகன் சதிஷ் (18) இன்று வீட்டின் அருகே உள்ளே கிணற்றின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் சதிஷை மீட்கப் போராடினர். ஆனால் மீட்க முடியவில்லை. பின்னர் சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் சதிஷை உயிருடன் மீட்டனர்.
சதிஷை உயிருடன் மீட்டதற்கு அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.