ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்து உணவக உரிமையாளர் உயிரிழப்பு: மீட்கச் சென்ற சிறுவனுக்கு சிகிச்சை!

சென்னை: கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த உணவக உரிமையாளரை மீட்கச் சென்று இரண்டு மணி நேரமாகப் போராடி 16 வயது மதிக்கத்தக்க சதிஷ் என்பவரை தாம்பரம் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்து உணவக உரிமையாளர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 21, 2020, 12:43 AM IST

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குகன் (40). இவர் படப்பை பஜார் பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில் படப்பை அண்ணாநகர் முதல் தெருவில் வசித்துவரும் குகனின் அக்கா ஆதிலட்சுமி வீட்டிற்குச் சென்ற குகன் வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றுக்கு அருகாமையில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது குகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனைக்கண்ட ஆதிலட்சுமியின் மகன் சதீஷ் (16) குகனை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால் நீச்சல் தெரியாததால் சதீஷ்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் விழுந்த குகன், சதீஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த குகனின் சடலத்தை மீட்டனர். உயிருக்குப் போராடிய சதீஷின் உடலில் கயிறு கட்டி துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த நபரை மீட்ட தீயனைப்புத் துறையினர்
இதையடுத்து கிணற்றில் விழுந்த குகனின் உடலை உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், மூச்சுத் திணறல் ஏற்பட்ட சதீஷை சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.