சென்னை: ஏப்ரல் 27 காலை 11 மணி அளவில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின் காரணமாக அறுவை சிகிச்சை அறையினுள் இருந்த 5 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின் காரணமாக அறுவை சிகிச்சை அறையில் உள்ள நரம்பியல் துறை உள்ளிட்ட துறைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து மருத்துவமனை டீன் தேரணிராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தீ விபத்துக்கான பிரிவின்கீழ் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூ.1.50 லட்சம் பணப்பையும்... கவ்விச் சென்ற வளர்ப்பு நாயும்...