சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்குச் சொந்தமான நெகிழி குடோனில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அடுத்தடுத்து இரண்டு குடோன்களுக்கும் தீ வேகமாகப் பரவியது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.
குடோனில் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நெகிழிப் பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. தீயில் சேதமடைந்தப் பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாதவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ மேலும் பரவாமல் தடுக்க அம்பத்தூர், செங்குன்றம், மாதவரம், மணலி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. தீ விபத்து குறித்து மாதவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.