ETV Bharat / state

தமிழ்நாட்டுக்கு 'வெடிகுண்டு மிரட்டல்' விடுத்த முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு! - Army man death

தமிழ்நாட்டுக்கு வெடிகுண்டு வைப்பது தொடர்பான பாணியில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு ‘வெடிகுண்டு மிரட்டல்’ விடுத்த முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Feb 22, 2023, 12:51 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எனவே, இந்த சம்பவத்தை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு பாஜக சார்பில் நேற்று (பிப்.21) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக நிர்வாகியும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன், ராணுவ வீரர்களை சீண்டினால் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நல்லது அல்ல என்றும், ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு பரீட்சை வைத்து பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், எங்களைச் (ராணுவ வீரர்களை) சீண்டினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என பகிரங்கமாக கூறினார்.

மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள் என்று ஆவேசத்துடன் பேசிய கர்னல் பாண்டியன், சுடுவதில் கெட்டிக்காரர்களாகவும், சண்டை போடுவதில் கெட்டிக்காரர்களாகவும் நாங்கள் உள்ளோம் என்றும், எனவே தமிழ்நாட்டில் இதனை எங்களைச் செய்ய வைத்து விடாதீர்கள் என மிரட்டும் விதமாக பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த நிலையில், இன்று (பிப்.22) திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கர்னல் பாண்டியன் மீது, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3,000 பேர் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அனுமதியின்றி ஊர்வலம் சென்ற அண்ணாமலை உட்பட 3ஆயிரம் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.