ETV Bharat / state

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரானப் புகார்களில் வழக்குப்பதிவு - தமிழ்நாடு அரசு தகவல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரானப் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தகவல்
தமிழ்நாடு அரசு தகவல்
author img

By

Published : Oct 20, 2021, 7:57 PM IST

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

ரூ.942 கோடி அளவுக்கு உபரி வருவாயைக் கொண்டிருந்த, சென்னை மாநகராட்சி எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியன்று சிபிஐ மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்ததில், 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் போன்றவைகளுக்காக KCP இன்ஜினியர்ஸ், SP பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

டெண்டர் நடைமுறைகளில் தலையிடவில்லை

இந்த வழக்குகளில் வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தான் எம்.எல்.ஏ.-வாகும் முன்பே, தன் சகோதரர்களின் நிறுவனங்கள், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரராக இருந்துள்ளதாக விளக்கம் அளித்திருந்தார்.

டெண்டரில் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள், தன்னுடைய அரசியல் விரோதிகள், டெண்டர் கிடைக்காதவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாகவும் தனது பெயரையும் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற, ஒரே நோக்கில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

வேலுமணி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (அக்.20) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரானப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல், அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் எனத் தெரிவித்தார்.

அறப்போர் இயக்கம் தரப்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜராகி, வேலுமணி மீது வழக்குப்பதிவது மட்டும் கோரிக்கை அல்ல என்றும், உடந்தையாக இருந்தவர்கள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுவிட்டதால், தங்கள் வழக்கை முடித்து வைக்கலாம் எனவும் தெரிவித்தார்.

வேலுமணி தரப்பில் வழக்கை எதிர்கொள்ளத்தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து இரு வழக்கின் விசாரணையையும் அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விசாகா குழு விசாரணைக்குத் தடை கோரிய மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.