ETV Bharat / state

'கற்பிக்கும் முறையின் மாற்றம் கல்வித் தரத்தை உயர்த்தும்' - பின்லாந்து கல்விக் குழு

author img

By

Published : Nov 26, 2019, 3:08 PM IST

சென்னை: கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவது, கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் எனப் பின்லாந்து நாட்டின் கல்வி குழுவினர் தெரிவித்துள்ளார்.

Finland education
Finland education

உலகளவில் கல்வி வளர்ச்சியில் தலை சிறந்த நாடாக முதல் இடத்தில் பின்லாந்து உள்ளது. இந்நாட்டின் கல்வி முறையில் உள்ள சிலவற்றைத் தமிழ்நாட்டில் கற்பிக்கும் முறையில் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பின்லாந்து நாட்டின் கல்வி முறை குறித்து தமிழ்நாட்டிலுள்ள 100 ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து 100 ஆசிரியர்கள் பங்கு பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பின்லாந்து நாட்டிலிருந்து வந்துள்ள கல்விக் குழுவினர் பாடம் கற்பிக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிய உள்ளனர்.

பின்லாந்து கல்வி முறை குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலுக்குப் பின மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடப்புத்தகங்களில் தேவையான மாற்றங்களைச் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படவுள்ளது. இது குறித்து, பின்லாந்து நாட்டின் கல்விக் குழுவினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ' தமிழ்நாடு அரசின் கல்வி கற்பிக்கும் முறை பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. மாணவர்களை மையப்படுத்திய கல்வி முறையைப் பின்பற்றினால், ஆசிரியர்கள் மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து, ஊக்கப்படுத்த வழிவகை ஏற்படும். மேலும், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவது கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும்' எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆராய அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!

Intro:மாணவர்கள்திறன்களை வளர்க்கும் வகையில்
புதிய கற்றல் வழிமுறை ஏற்படுத்த வேண்டும்

Body:சென்னை,
மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் புதிய கற்றல் வழி முறைகளை உருவாக்க வேண்டும் என பின்லாந்து நாட்டு கல்வி குழுவினர் தெரிவித்தனர்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் பின்லாந்து நாட்டின் கல்வி முறை குறித்து தமிழகத்திலுள்ள 100 ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 100 ஆசிரியர்கள் பங்கு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பின்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ள கல்வி குழுவினர் அங்கு பாடம் கற்பிக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய உள்ளனர்.

பின்லாந்து நாட்டின் கல்வி முறை உலகளவில் சிறந்த கல்வி முறை எனக் கருதுவதால் அந்த முறையில் உள்ள சிலவற்றை தமிழகத்தில் கற்பிக்கும் முறையில் இணைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின்னர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடப்புத்தகங்களில் தேவையான மாற்றங்களை செய்வது குறித்து பரிசீலிக்க உள்ளது.

இந்நிலையில் பின்லாந்து நாட்டின் கல்வி குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாணவர்களை மையப்படுத்திய கல்வி முறை பின்பற்றினால் ஆசிரியர்கள் பாடம் மருத்துவத்திலிருந்து ாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து ஊக்கப்படுத்த வழிவகை ஏற்படும்.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக அரசின் கல்வி கற்பிக்கும் முறை பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது.

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவது கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.