கரோனா தொற்று பரவலைத் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. கடந்த சில நாள்களாக ஊரங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ள போதும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறுபவர்களைத் தொடர்ந்து காவல் துறையினர் கண்காணித்து அவர்கள்மீது நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள கடந்த 76 நாள்களில் தடையை மீறியதாக ஐந்து லட்சத்து 99 ஆயிரத்து 315 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு லட்சத்து 55 ஆயிரத்து 375 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு, 10 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 534 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஐவருக்குக் கரோனா!