சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலக வளாகமான ஆயக்கர் பவனில், சிகரம் என்ற 19 மாடி அலுவலர்கள் குடியிருப்பு கட்டடத்தை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப்.30) திறந்து வைத்தார்.
இது ஆறாம் ரக அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம் ஆகும். இந்த கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியன.
இந்த குடியிருப்பு வளாகம் ஒட்டு மொத்தமாக 13 ஆயிரத்து 590 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. சிகரம் கட்டடம் 243 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இதில் 120 கார்களை நிறுத்தும் அளவிற்கு பன்னடுக்கு வாகன நிறுத்தம், மின்தூக்கிகள், சூரிய மின் உற்பத்தி வசதி, 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை, மத்திய மயமாக்கப்பட்ட திடக்கழிவு சேகரிப்பு முறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதையும் படிங்க: காவலர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டிய டிஜிபி