ETV Bharat / state

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும் - சத்யபிரதா சாகு - தலைமை தேர்தல் அலுவலர்

சென்னை: 11, 12 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

voters
voters
author img

By

Published : Jan 10, 2020, 9:27 PM IST

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் கல்வியறிவு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மாநகராட்சியால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஓவியங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, ”வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைத்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவர்களுக்கு இதுதொடர்பாக போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதன் மூலம் விடுபட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தயாராகும் என எதிர்பார்க்கலாம்” என்றார்.

இதையும் படிங்க: வாக்காளர் விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

Intro:

Body:tn_che_04_voters_day_competition_ceo_byte_visual_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.