ETV Bharat / state

வாக்காளர்களுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைத்திடுக - அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

corporation
corporation
author img

By

Published : Jan 5, 2023, 1:31 PM IST

சென்னை: சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று(ஜன.5) வெளியிடப்பட்டது. மாவட்ட துணை தேர்தல் அலுவலர் பிரசாந்த், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுறுக்கமுறை திருத்தம் மூலம் சென்னையில் 54,347 வாக்காளர்கள் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 64,527 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சென்னையில் 19 லட்சத்து 9 ஆயிரத்து 512 ஆண் வாக்காளர்கள்,19 லட்சத்து 71 ஆயிரத்து 653 பெண் வாக்காளர்கள், 1,112 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதிக வாக்காளர் உள்ள சட்டமன்ற தொகுதியில் குறைந்த வாக்குச்சாவடியும், குறைந்த வாக்காளர் உள்ள தொகுதியும் அதிக வாக்குச்சாவடிகள் உள்ளன, இந்த வேறுபாட்டை களைந்திட வேண்டும் - வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும், இதன் மூலம் அரசியல் கட்சிகள் அதனை பரிசோதித்துக் கொள்ள முடியும் -

மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் வாக்காளர் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்கு செலுத்த சென்றால், அங்கு அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் என்று மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர், இதற்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.