சென்னை: ஈவி கணேஷ்பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கட்டில் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நேற்று (ஜன.3) நடைபெற்றது. இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பேசியபோது, கட்டில் என்ற வித்தியாசமான பெயரில் 3 தலைமுறைகள் குறித்து எடுத்துரைத்த இந்த படம் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும். கரோனா காலகட்டம் முடிந்து தற்போது தான் சினிமா தொழில் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.
இந்த படம் வியாபார நோக்கம் இல்லாமல் சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளதால், இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். இந்த துறைக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதையெல்லாம் முதலமைச்சர் கேட்டு கேட்டு செய்து கொடுத்து வருகிறார்.
சென்னை எம்ஜிஆர் திரைப்பட நகரை சீர்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது என்றார்.
இதையும் படிங்க: கிரஷர் உரிமையாளர்கள் உண்ணாவிரதம் வாபஸ்