ETV Bharat / state

கி.வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: இந்துக் கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த கி.வீரமணியை கைது செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Apr 23, 2019, 8:11 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.அசோக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'இந்துக் கடவுள் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் ஒப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அந்த வீடியோ, யூ ட்யூப் மற்றும் செய்தித்தாள்களில் வெளியான நிலையில் தொடர்ந்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வீரமணி பரப்பி வந்தார்.

இதையடுத்து, மனுதாரர் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கி.வீரமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால், கி.வீரமணியை கைது செய்ய காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், கி.வீரமணியை கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், மனுதாரர் தொடர்ந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து கருத்து தெரிவித்த கி.வீரமணியை கைது செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.அசோக் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், இந்து கடவுள் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் ஒப்பிட்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

அந்த வீடியோ, யூடியூப்பில் மற்றும் செய்தித்தாள்களில் மற்றும் வெளியான நிலையிலும் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வீரமணி பரப்பி வந்தார்.

இதையடுத்து, மனுதாரர் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கி.வீரமணி மீது எம்.ஐ.ஆர் பதிவு செய்தனர். 

ஆனால், கி.வீரமணியை கைது செய்ய காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், கி.வீரமணியை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், மனுதாரர் தொடர்ந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Send from my iPhone

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.