சென்னை: தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் நிறுவனர் வீரலட்சுமி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், "சமீப காலமாக வயது வித்தியாசமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறிவருகின்றன. எனக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சிலர் வாட்ஸ்அப் மூலம் ஆபாச காணொலிகளை அனுப்பி தொந்தரவு செய்தனர்.
அது தொடர்பாக பரங்கிமலை துணை ஆணையரிடத்தில் அளிக்கப்பட்ட புகார், சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை அலட்சியம் காட்டிவருகின்றது.
ஃபேஸ்புக் கணக்கில் அனுப்பப்பட்ட ஆபாச காணொலிகள்
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கமலேஷ், முனி என்ற இரு ஃபேஸ்புக் கணக்கிலிருந்து, எனது ஃபேஸ்புக் கணக்கிற்கு ஆபாச காணொலிகள் அனுப்பப்பட்டன. அதேபோல முத்து வீர முரளி என்ற ஃபேஸ்புக் கணக்கிலிருந்து, என்னை விலைமாது எனக் குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 19) நேரடியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளேன். புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து