ETV Bharat / state

அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை நுழைவு படிவம் பெற ரூ.100 கட்டணம்! - சென்னை செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை நுழைவு படிவம் பெற ரூ.100 கட்டணம் வாங்கிய காணொலி வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கை நுழைவு படிவம் பெற ரூ.100 கட்டணம்

author img

By

Published : Jun 18, 2021, 1:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் குறைந்துவருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகின்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமென அரசு அறிவித்தது.

அதன்படி தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் புதிய கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சிக்குள்பட்ட அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

படிவம் நிரப்புவதற்குப் பள்ளி நிர்வாகம் பணம் வாங்கிய காணொலி
இப்பள்ளியில் சுமார் 1,700 மாணவர்கள் படிக்கக்கூடிய இடவசதி உள்ளதால் கடந்த இரண்டு நாள்களாகப் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன. மாணவர்கள் சேர்க்கைக்கான படிவத்திற்கு கட்டணம் எதுவும் வாங்கக் கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்த நிலையில் தற்போது இப்பள்ளியில் சேர்க்கை படிவத்திற்கான கட்டணமாக ரூ.100 பெற்றுக்கொண்டு அதற்கு எவ்வித ரசீதும் கொடுக்காமல் அனுப்புகின்றனர்.
இதனை மாணவர்களின் பெற்றோர் எதற்கு கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் பணம் கொடுத்தால் படிவம் கிடைக்கும் இல்லை என்றால் கிடையாது எனப் பள்ளி நிர்வாகத்தினர் கூறி அனுப்புகின்றனர்.
இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் படிவம் நிரப்புவதற்குப் பள்ளி நிர்வாகம் பணம் வாங்கிய காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.