ETV Bharat / state

மத்திய அரசின் ஊக்குவிப்பு அறிவிப்புகள் பலனளிக்காது- பொருளாதார நிபுணர்கள் கருத்து - Federation of Indian Export Organisations

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகளால் எந்தப் பயனும் ஏற்படாது என்று ரியஸ் எஸ்டேட் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன் credai
author img

By

Published : Sep 14, 2019, 11:48 PM IST

Updated : Sep 15, 2019, 3:01 PM IST

கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துவந்தாலும் மத்திய அரசு இதனை ஏற்க மறுத்துவருகிறது. இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள தொழில் துறையினருடன் தொடர்ந்து கலந்துரையாடி அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ரியல் எஸ்டேட் துறையை (மனை வணிகத் துறை) ஊக்குவிக்கும் வகையிலும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், அவர் வெளியிட்ட எந்த அறிவிப்புகளும் ரியல் எஸ்டேட் துறைக்கு நன்மை ஏற்படுத்தாது என்கின்றனர் அந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள்.

இந்திய மனை வணிக நிறுவனங்களில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய கிரடாய் (CREDAI) என்று அழைக்கப்படும் இந்திய மனை வணிக நிறுவனங்களில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, "தற்போதுள்ள சூழ்நிலையில், அரசு வீடு வாங்குபவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டிருக்க வேண்டும். வீட்டுக் கடன்களை திரும்பச் செலுத்தும் தேதியினை நீட்டிக்க வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு வெளியிட்டிருக்கும் இரண்டு அறிவிப்புகள் ரியல் எஸ்டேட் துறையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

அதேநேரத்தில், ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 6.1 விழுக்காடு வரை சரிவடைந்துள்ளது. ஏற்றுமதி தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய நிர்மலா சீதாராமன், 'உலகப் பொருளாதார சூழல் காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். எனவே இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவது அரசின் கடமை' எனக் கூறியுள்ளார்” என்றார்.

Intro:Body:

Economy Byte

Conclusion:
Last Updated : Sep 15, 2019, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.