ETV Bharat / state

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்குச் சாகும் வரை சிறைத் தண்டனை - போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Daughter sexual abuse: சென்னையை சேர்ந்த 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்குச் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்
சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 7:34 PM IST

சென்னை: தனது தந்தையால் 8 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக சென்னையை சேர்ந்த 12 வயது சிறுமி தாயிடம் கூறியுள்ளார். கணவரின் நடந்தையை கண்டித்த மனைவி, காவல் துறையில் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே கடிதம் மூலம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வழக்கில் இருந்து சிறுமியின் மாமா ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றத்தை மறைத்ததற்காக, சிறுமியின் தாய்க்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது சகோதரிக்கும், தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அனல் பறக்கும் அரசியல் வசனங்கள்.. கேப்டன் மில்லர் படத்தைப் பாராட்டிய அமைச்சர் உதயநிதி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.