ETV Bharat / state

4 மாத குழந்தையைக் கொன்று புதைத்த கொடூரத் தந்தை - பகீர் பின்னணி - perumattu nallur funeral

தாம்பரம் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்ற நிலையில், அந்த குழந்தையை மனைவிக்குத் தெரியாமல் கொன்று புதைத்த தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

4 மாத குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை!

author img

By

Published : Mar 3, 2023, 8:17 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர், வருண் (20). இவரும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (20) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். இதனால், விஜயலட்சுமி கர்ப்பம் ஆகியுள்ளார். எனவே காதலன் வருண், தனது வீட்டிற்குத் தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், அவரை மாடம்பாக்கம் அருகே தனியாக தங்க வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் விஜயலட்சுமி, வருணின் வீட்டிற்கு தன்னையும், குழந்தையையும் அழைத்துச்செல்லுமாறு வருணிடம் கூறியுள்ளார். இதனையடுத்து வருண், தனது பெற்றோரிடம் தனக்குத் திருமணம் ஆகியதாகவும், தற்போது 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாகவும், தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணை மாடம்பாக்கம் அருகே தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வருணின் பெற்றோர், திருமணம் செய்து கொண்ட விஜயலட்சுமி மற்றும் இருவருக்கும் பிறந்த ஆண் குழந்தையை எங்கேயாவது விட்டுவிட்டு வருமாறு கூறியுள்ளனர். இதனால் விஜயலட்சுமியிடம் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனக்கு பிறந்த குழந்தையை வாங்கிய வருண், தனது நண்பருக்கு குழந்தை இல்லாததால் அவரது வீட்டில் குழந்தை வளரட்டும் எனக் கூறியுள்ளார்.

பின்னர் நீண்ட நாட்களாக குழந்தையைப் பார்க்க வேண்டும் என விஜயலட்சுமி வருணிடம் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜயலட்சுமி, வருணின் நண்பர் வீட்டிற்குச்சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி, இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வருணை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வருண், விஜயலட்சுமியிடம் இருந்து தனது நண்பரின் வீட்டில் வளரட்டும் என வாங்கிய குழந்தையை எடுத்துக் கொண்டு கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூர் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு தான் பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று புதைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பெருமாட்டு நல்லூர் சுடுகாட்டுக்குச் சென்ற காவல் துறையினர், அங்கு புதைக்கப்பட்டிருந்த 4 மாத ஆண் குழந்தையின் எலும்புக்கூடுகளை கைப்பற்றினர். தொடர்ந்து அதனை உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 10 ஆண்டுகள் தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.