ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்தில் வாகனத்தை ஒட்டிய மாணவரின் தந்தை கைது - அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் மூளைச் சாவு அடைந்த நிலையில், இருசக்கர வாகனத்தை இயக்கிய மற்றொரு கல்லூரி மாணவனின் தந்தையை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இருசக்கர வாகன விபத்தில் வாகனத்தை ஒட்டிய மாணவரின் தந்தை கைது

author img

By

Published : Sep 8, 2022, 12:58 PM IST

சென்னை: ஐ.சி.எஃப் காஸ்டபிள் சாலை - டங்கன் சாலை சந்திப்பில் கடந்த மாதம் 26ஆம் தேதி மாலை இரு கல்லூரி மாணவர்கள் அமர்ந்து வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் வாகனத்தை ஓட்டி வந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பின்னால் அமர்ந்து வந்த திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் லோகேஷ் (18) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விபத்துச் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் 18 வயது நிரம்பாதவர்கள் எனவும், தலைக் கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதே விபத்துக்கு காரணம் எனவும் போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவன் லோகேஷ் மூளைச் சாவு அடைந்ததாக தனியார் மருத்துவமனை அறிவித்தது.

இதனை தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என வழக்கை மாற்றி பதிவு செய்து, வாகனத்தின் உரிமையாளரான மற்றொரு கல்லூரி மாணவனின் தந்தை சுப்பிரமணி (52) என்பவரை திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

வாகனத்தை இயக்கிய கல்லூரி மாணவன் 18 வயது நிரம்பாதவர் என்பதால் அவரது தந்தையை கைது செய்துள்ளதாக போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுப்பிரமணியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் போலி சிற்பங்களை வைத்துவிட்டு திருடப்பட்ட 4 சிலைகள், அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.