ETV Bharat / state

மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு!

திருவொற்றியூர் பகுதியில் கடலில் குளித்த போது இழுத்து செல்லப்பட்ட மகளை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Father killed trying to save daughter
Father killed trying to save daughter
author img

By

Published : Sep 11, 2021, 10:45 PM IST

Updated : Sep 12, 2021, 11:53 AM IST

சென்னை : திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்தவர் வேணுகோபால் (43). இவர் நேற்று (செப்.10) எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் தனது மனைவி திவ்யலதா, மகள் தனிகா (12), மகனுடன் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தனிகா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக வேணுகோபால் மகளைக் காப்பாற்ற முயற்சி செய்து கடலுக்குள் சென்றார்.

ஆனால் இருவரையும் கடல் அலை இழுத்து சென்றது. இதைப் பார்த்த திவ்யலதாவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து கடலில் சிக்கிய வேணுகோபால் மற்றும் தனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வேணுகோபாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் உயிருக்குப் போராடிய நிலையில் தனிகாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக தனிகா எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் புதிதாக 1,639 பேருக்கு கரோனா!

Last Updated : Sep 12, 2021, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.