ETV Bharat / state

பேய் மாமா படத்தில் நகைச்சுவையில் கலக்கிய ரேகா - ரசிகர்கள் பாராட்டு! - பேய் மாமா படம்

பேய் மாமா படத்தில் தனது நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
ரசிகர்கள் பாராட்டு
author img

By

Published : Sep 24, 2021, 8:15 PM IST

சென்னை: ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரேகா, எம்எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பேய் மாமா. திகில் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று (செப்.24) வெளியாகியது. இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரேகாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகை ரேகா பகிர்ந்துள்ள தகவலில், "நான் ‘கடலோரக்கவிதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி வரவேற்று உற்சாகப்படுத்தினீர்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்த போதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்றீர்கள்.

என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் காரணமாக இருந்து வருகிறீர்கள். உங்களின் ஒத்துழைப்புக்கும், மரியாதைக்கும் நன்றி.

பேய் மாமா படத்தில் நகைச்சுவையில் கலக்கிய ரேகா

தியேட்டரில் சிரித்து மகிழ்ந்தனர்

இப்போது ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நான் நடித்திருப்பதைக் கண்டு பலர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி, தியேட்டரில் சிரித்து மகிழ்ந்த தகவலை பகிர்ந்து கொண்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்த போது எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பின்னர் நான் அதை ஏற்று நடித்தேன். என்னுடைய திரை வாழ்க்கையில் என் மீது நான் வைத்த நம்பிக்கையை விட, மற்றவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது.

நெகிழ்ச்சியில் ரேகா

அந்த வரிசையில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் என்னை நகைச்சுவை நடிகையாக பார்த்தார். எனக்குள் இருக்கும் அந்த திறமையை மக்களுக்கு அந்த பாத்திரம் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் நடித்தேன். இப்போது நீங்கள் பாராட்டுவதை கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன். என்னால் நகைச்சுவை வேடத்திலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்கள் வாழ்த்துக்கள் மூலம் கிடைத்திருக்கிறது.

இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தனி தனியாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் வெளியாகாத ரியோ படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.