ETV Bharat / state

பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் பிரபல கொள்ளையன் கைது - குற்றச் செய்திகள்

வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, பணம், நகையை கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

பிரபல கொள்ளையன் கைது
author img

By

Published : Aug 6, 2021, 4:28 PM IST

Updated : Aug 6, 2021, 4:36 PM IST

சென்னை: வடபழனியைச் சேர்ந்தவர் மோகன் வடிவேல். இவர் கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருக்கிறார். அப்போது கடந்த ஜூலை 21ஆம் தேதி, பூட்டிய வீட்டிற்குள் புகுந்த அடையாள தெரியாத நபர் ஒருவர் 3 சவரன் நகை, ரூ. 4 ஆயிரத்து 500 பணம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளார்.

இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 3 சவரன் நகை, ரூ. 8 ஆயிரம் பணமும் இதேபாணியில் திருடப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில் இருவேறு குற்ற சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்த வடபழனி காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் அறிவழகன்
கைது செய்யப்பட்ட கொள்ளையன் அறிவழகன்

வன்புணர்வு காணொலியைக் காட்டி பணபறிப்பு

அப்போது இரண்டு வீட்டிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்களை, பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் அறிவழகன் என்பது தெரியவந்தது. பட்டதாரியான அறிவழகன் பெண்கள் தனியாக இருக்கக்கூடிய வீட்டை நோட்டமிட்டு உள்ளே புகுந்து, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதனை காணொலியாக எடுத்து வைத்துக் கொள்வார்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் நகை, பணத்தை மிரட்டி பறித்து செல்வது இவரது வாடிக்கை. பின்னர் பாலியல் வன்புணர்வு காணொலியை காண்பித்து மிரட்டி பணப்பறிப்பிலும் ஈடுபடுவார். இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை அறிவழகன் பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டியிருக்கிறார்.

ஓசூரில் பதுங்கிய குற்றவாளி

இது குறித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அறிவழகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாள்களுக்கு முன்னர்தான் வெளியே வந்தது தெரியவந்தது.

இவர் மீது ஏற்கனவே சைதாப்பேட்டை, கிண்டி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியபட்டது. இந்நிலையில் வடபழனி கொள்ளை சம்பவத்துக்கு பின்னர் அறிவழகன், ஓசூரில் பதுங்கியிருந்துள்ளார்.

இதனையடுத்து ஓசூர் விரைந்த தனிப்படை காவலர்கள், அறிவழகனைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

பழைய பாணி - பூட்டிய வீட்டில் கொள்ளை

மீண்டும் பழைய பாணி திருட்டில் ஈடுபட்டால் சிக்கிக் கொள்வோம் என நினைத்த அறிவழகன், வடபழனியில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இவரிடமிருந்து 10 சவரன் நகை, ரூ. 90 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஏடிஎம்மில் பணத்தைத் திருட எலிபோல் நுழைந்த இளைஞர் - கொள்ளை முயற்சியில் பலே திருப்பம்!

Last Updated : Aug 6, 2021, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.