ETV Bharat / state

ஜெயக்குமார் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன - வழக்கறிஞர் இன்பதுரை - ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என ஜெயக்குமாரின் வழக்கறிஞர் இன்பதுரை குற்றஞ்சாட்டினார்.

வழக்கறிஞர் இன்பதுரை
வழக்கறிஞர் இன்பதுரை
author img

By

Published : Mar 1, 2022, 8:21 AM IST

சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்தாண்டு ஜூன் மாதம் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மீது மகேஷ் புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த புகார் மீது கடந்த பிப்.24ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

120(பி)-கூட்டுசதி, 447-அத்துமீறி நுழைதல், 326-பயங்கர ஆயுதங்களை கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், 397-பயங்கர ஆயுதங்களால் கொள்ளையில் ஈடுபடுதல், 506(2)-கொலை மிரட்டல், 109- குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமாரை பிப்.25ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று(பிப்.28) ஆலந்தூர் ஜேஎம்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் வாதம்

இது குடும்ப சொத்து தொடர்பான வழக்கு. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. திமுக அரசு தன்மீது வேண்டுமென்று பழிவாங்க வேண்டுமென்று போடப்பட்ட வழக்கு. அண்ணன்-தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்சினை, இந்த விவகாரத்தில் என்னை எப்படி சேர்க்க முடியும். இது சிவில் வழக்கு, இதில் எப்படி நில அபகரிப்பு வரும். 1991ஆம் ஆண்டு முதல் அரசியலில் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். என் மீது ஒரு வழக்கு கூட கிடையாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த வழக்கு முழுவதும் அண்ணன்-தம்பிக்கு இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்சினை இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். முன்னாள் அமைச்சராக, முன்னாள் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் மீது 397 கொள்ளைப் பிரிவு பதிவு செய்யப்பட்டு இருப்பது மிகவும் அநாகரிகமான செயல் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயக்குமாரை மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பதற்காக செய்துள்ளனர்

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் இன்பதுரை, "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தொடர்ந்து பொய் வழக்குகள் போடுகின்றன. அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளன.

ஜெயக்குமார் மருமகன் நவீன் மற்றும் அவரது அண்ணனுக்கு இடையே சொத்துப் பிரச்சினை உள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் அண்ணன்-தம்பி சொத்துப் பிரச்சனை எனக் கூறி சமரச பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் இருவருக்கும் சமரசம் ஏற்படவில்லை. இதில் மருமகன் நவீனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செயல்பட்டதாக கூறி கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக நபரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் ஜெயக்குமார் வெளியே வரக்கூடாது என்பதற்காக புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜெயக்குமாரை சிறையில் அடைப்பதற்காக நீதிமன்றம் வரை கொண்டு வந்துள்ளனர்.

இதில் உருட்டுக்கட்டை உடன் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக தவறான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தப் பிரிவுகள் வேண்டுமென்று சேர்க்கப்பட்டுள்ளன. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றும், சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்றும் சேர்த்துள்ளனர். சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி அவரை வெளியே வர விடாமல் தடுப்பதற்காக காவல்துறை செயல்படுகிறது.

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக கூறப்படும் மாநிலத்தில் இதுபோன்று நடப்பது முறை அல்ல. ஒரு அமைச்சராக இருந்தவருக்கு இந்த நிலைமை என்றால் சாமானியனுக்கு என்ன நிலைமை ஏற்படும்" என்று கூறினார்.

வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி

இதையும் படிங்க: மறைமுக தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.