ETV Bharat / state

வீட்டில் சொல்லி விடுவேன்.. ஓவர் ஓவர்.. காதலர்களை மிரட்டிய போலி போலீஸ்...

காவலர் போல நடித்து, காதலர்களிடம் மிரட்டி பணம் பறிப்பது மட்டுமில்லாமல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் சொல்லி விடுவேன்.. ஓவர் ஓவர்..  போலி போலீஸ் கைது!

author img

By

Published : Jun 18, 2022, 4:43 PM IST

சென்னை: வளசரவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் (35), அதிமுக மாணவர் அணி மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி தனது நண்பர்களான அபிஷேக் ஜேக்கப், யாசின் ராஜா ஆகியோருடன் சேர்ந்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பரின் குழந்தையை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது காரை பார்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றார். அப்போது காரில் 13 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து திரும்பி வந்த போது, காரினுள் இருந்த 13 லட்சம் ரூபாய் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, காக்கி பேண்ட் அணிந்து, கையில் வாக்கி டாக்கியுடனும் வந்த ஒருவர், காரை திறந்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜமாலுதீன்(41) கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அப்போது “கடந்த 11 ஆம் தேதி ஹாரிங்டன் சாலையில் தனது காதலருடன் காரில் இருந்த இளம்பெண்ணை நான் (ஜமாலுதீன்) காவலர் எனக்கூறி மிரட்டினேன். அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தேன். மிரட்டி பணம் பறித்தேன்.

இதேபோல காக்கி பேண்ட் கையில் வாக்கிடாக்கியுடன் காவலர் போல பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று, காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி காதலர்களை மிரட்டி பணம் பறித்துள்ளேன்.

இதேபோல சுற்றித்திரியும்போது தான், காரில் பணத்தை எடுத்தேன் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து 13 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஜமாலுதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் 45 சவரன் நகை திருட்டு - அதிமுகவை சேர்ந்த இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.