சென்னை: மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றிவரும் காமாட்சி மற்றும் சேதுலதா ஆகிய இருவரும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக பல கட்ட விசாரணை நடத்திய நிலையில் இருவரும் போலி சான்றிதழ் கொடுத்து உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காமாட்சி 2009ஆம் ஆண்டிலும் சேதுலதா 2011ஆம் ஆண்டிலும் உதவி பேராசிரியராக மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியில் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் புகழ்வாய்ந்த மாநிலக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த இரண்டு உதவி பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்த ஆயிரம் பேர்- அதிர்ச்சியில் தமிழ்நாடு தேர்வுத்துறை