ETV Bharat / state

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - கால் செய்தவரை தட்டி தூக்கிய போலீஸ்! - Fake bomb threat

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மேலாளருக்குத் அழைத்த நபரை, சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

fake- bomb
வெடிகுண்டு மிரட்டல்
author img

By

Published : Jun 20, 2021, 12:24 PM IST

சென்னை: விமான நிலைய மேலாளருக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய நபர், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்று காலைக்குள் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர், உடனடியாக விமான நிலைய உயர் அலுவலர்களுக்கும், காவல் துறைக்கும், விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்களுக்கும் தகவல் அளித்தார்.

இதையடுத்து, விமான நிலையத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படையினா்,காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு விமான நிலையம்,சர்வதேச விமான நிலையம், காா் பார்க்கிங் என அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்காததையடுத்து, அது போலி மிரட்டல் எனத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, மேலாளருக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் காவல் துறையினர் ட்ராக் செய்ய தொடங்கினர். அப்போது, அந்த அழைப்பு சென்னை பழவந்தாங்கல் பகுதியிலிருந்து வந்தது தெரியவந்தது.

மேலும், அங்கு வசிக்கும் அருள் ராபா்ட்(28) என்பவரை தனிப்படை காவல் துறை கைது செய்து விசாரணை நடத்தியது. அதில், போலி மிரட்டல் விடுத்தது உறுதியானது.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சையில் இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டிலிருந்தே வருமானம்' - விளம்பரத்தை நம்பி வில்லங்கத்தில் சிக்கிய நபர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.