ETV Bharat / state

ராம்குமார் மரணம் குறித்து அரசு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - மனித உரிமைகள் ஆணையம்

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ராம்குமார் மரணம் குறித்து அரசு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்- மனித உரிமைகள் ஆணையம்

author img

By

Published : Oct 31, 2022, 4:36 PM IST

Updated : Oct 31, 2022, 11:06 PM IST

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான புழல் சிறை வார்டன் பேச்சிமுத்து தனது வாக்குமூலத்தில், ராம்குமார் கம்பியைக்கடித்தபோது, லத்தியால் தள்ளி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், 'சிறையில் குறைந்த ஊழியர்கள் உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது, அரசாங்கத்திற்கும் இதில் பொறுப்பு உள்ளது. சிறையில் போதியளவில் அலுவலர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை. ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை' எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாயை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அலுவலர்களை நியமிக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: மோர்பி பால விபத்தில் பெற்றோரை இழந்த நான்கு வயது குழந்தை..

Last Updated : Oct 31, 2022, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.