ETV Bharat / state

அமலுக்கு வந்தது மலக்கசடு, கழிவுநீர் வெளியேற்ற சட்ட திருத்தம் - தேசியக் கொள்கை

திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை நிறுத்த இயற்றப்பட்ட சட்ட திருத்தம் அமல் செய்யப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்தது மலக்கசடு, கழிவுநீர் வெளியேற்ற சட்ட திருத்தம்

author img

By

Published : Jan 5, 2023, 10:29 PM IST

சென்னை: திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிறகழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை நிறுத்துதல் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதி செய்ய இயற்றப்பட்ட, 2022 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 34/ 2022) நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டு மக்கள் தொகையில், சுமார் 50 சதவீத மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் தொழிலாளர்கள் நுழைவதைத் தடை செய்து, கழிவுநீர் சுத்தம் மற்றும் பராமரிப்பில் இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்தியதோடு, மனிதக் கழிவை மனிதர் நீக்கும் அவலத்தையும், மரணங்களையும் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் படி கழிவுநீரை அகற்றுவதற்கும், மலக்கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்கள் அல்லது பிற வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். அதன்படி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், சென்னை பெருநகரப்பகுதிகளில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குத் தகுந்த திருத்தங்கள் 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

மலக்கசடு மற்றும் கசடு கழிவு மேலாண்மை தேசியக் கொள்கையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் முழு அளவிலான சுகாதாரத்தை வழங்குவதற்காக, கழிவுநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு மற்றும் கழிவுநீரை, வாகனங்கள் மூலம் அகற்றி, சுத்திகரித்தல், வெளியேற்றல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான திட்டம் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நோக்கங்களுக்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் ஆகியவற்றிற்கான சட்டங்களைத் திருத்தி, ஒழுங்குபடுத்துவதற்கான உரிய வழிமுறைகளை உருவாக்கி அதன் தொடர்ச்சியாக புதிய விதிகளையும் உருவாக்கி கடந்த 1 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

இச்சட்டம் மற்றும் விதிகளின் படி, மலக்கசடு மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,000 ஆகும். மேலும், உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளைக் கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது இச்சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும்.

உரிய உரிமம் பெற்றவர்கள், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நேரம், வழி ஆகியவற்றைப் பின்பற்றி, குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, புவியிடம் காட்டும் அமைப்பு (GPS) பொருத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வதுடன், அக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவை அனுப்புவதையும் உறுதிசெய்ய இவ்விதிமுறைகள் வழி செய்கிறது.

உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்தும் வசதியினை ஒரு முறை பயன்படுத்துவதற்கு 6,000 லிட்டர் வரைக்கும் 200 ரூபாயும் 6,000 லிட்டருக்கு மேற்பட்ட இனங்களுக்கு 300 ரூபாயும் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதைத் தடை செய்ய வழிமுறைகள் உள்ளதுடன், உரிமதாரர்கள் தவறு செய்தால் புகார்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் மற்றும் உரிமத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றத்திற்கு 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அதன்பின்பு, இரண்டாவது மற்றும் தொடர் குற்றங்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

மலக்கசடுகள், கழிவுநீர், இதன் தொடர்புடைய இதர கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் ஏற்ப விரிவான செய்முறை வழிகாட்டு நெறிமுறைகள் (Operative Guidelines) உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக நடைமுறைப்படுத்த துணை விதிகளை (bye-laws) உருவாக்கிட மாதிரி துணை விதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சட்டவிதிகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளிகளில் மலக்கசடுகள், கழிவுநீர் போன்றவற்றை வாகனங்கள் மூலம் கொட்டுதல் தடுக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து உயிரிழக்கும் காட்டுப்பன்றிகள் - விளக்கம் தருகிறார் கள இயக்குநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.