பொன்பரப்பி கலவரத்தைக் கண்டித்து ஏப்ரல் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட எஸ்றா சற்குணம் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், பாமக நிறுவனர் ராமதாஸையும் கொச்சைப்படுத்தி பேசியதாக பாமக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் பாமக குறித்து தவறாக பேசிய எஸ்றா சற்குணம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மே 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.