சென்னை கோயம்பேடு பகுதியில் சாலையோரம் வசித்து வருபவர் சாந்தி (46). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் சிஎம்பிடி பேருந்து நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சாந்திக்கும் அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இதனிடையே சாந்திக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவன் மனைவி போல் நெருங்கி பழகி வந்தனர். இதற்கிடையில் சாந்திக்கு கோயம்பேட்டில் கூலி வேலை செய்து வந்த முத்து (48) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, சாந்தி தனது 2ஆவது கணவரை விட்டு முத்துவுடன் இருந்து வந்தார்.
இதனால் சாந்திக்கும் இரண்டாவது கணவருக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இதனைப் பிடிக்காத முத்து, சாந்தியிடம் இத குறித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாந்தி முத்துவுடனான பழக்கத்தை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்து, நள்ளிரவில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த சாந்தி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததுடன், முத்துவும் தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த காவல்துறையினர், இருவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முத்து 70 விழுக்காடு காயங்களுடனும், சாந்தி 90விழுக்காடு தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடற்கரையை இனி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதி?