ETV Bharat / state

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
author img

By

Published : Sep 27, 2022, 12:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்களால் தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பயன் அடைய உள்ளனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது பழைய முறைப்படி 58 ஆக இருந்தது.

இந்த நிலையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்கள ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டுகளை வீசும் தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.