கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும்வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பொதுமக்கள் வெளியே வரத் தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் பால், மருந்துப் பொருள்கள், காய்கறிகள், மளிகைச் சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுசெல்பவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுவந்தது. ஏப்ரல் 14ஆம் தேதிவரை வழங்கப்பட்டிருந்த அனுமதிச்சீட்டு, தற்போது மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார்.
மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நாளை வெளியாகும் எனவும் அதுவரை அத்தியாவசிய பணியாளர்கள் வழக்கம்போல் தங்கள் பணியைத் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பரவலைக் கண்காணிக்க செயலி - கலக்கும் சென்னை மாநகராட்சி!