ETV Bharat / state

11 மாவட்டங்களுக்கு மின் கட்டணத் தொகை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - electricity bills

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மேற்கு, மத்திய மண்டலங்களில் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணத் தொகை செலுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு மின்சாரத் துறை நேற்று முன்தினம் (ஜூன் 22) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரத் துறை
தமிழ்நாடு மின்சாரத் துறை
author img

By

Published : Jun 23, 2021, 7:03 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகத் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள மேற்கு, மத்திய மண்டலங்களில் உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து தமிழ்நாடு மின்சாரத் துறை நேற்று (ஜூன் 22) உத்தரவிட்டுள்ளது. அதன்படி நுகர்வோர்கள் ஜூன், 2019இல் எவ்வளவு தொகையை மின் கட்டணமாகச் செலுத்தினார்களோ, அதே கட்டணத்தையே செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக மின் இணைப்புப் பெற்றவர்களுக்கு மட்டும் கடந்த ஏப்ரல் மாத மின் கட்டணத் தொகை பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது. பின்னர் மீதத் தொகையானது, புதிதாகக் கணக்கெடுக்கப்பட்டு செலுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : 10 ஆயிரத்திற்கு மேல் அபராதம் வாங்கிய மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.