ETV Bharat / state

திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு - raja disproportionate case

திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு
திமுக எம்.பி. ஆ.திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்குராசாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு
author img

By

Published : Feb 8, 2023, 8:51 PM IST

சென்னை: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து திமுக எம்.பி. ஆ.ராசாவிற்கு விலக்கு அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி உத்தரவிட்டுள்ளது. திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக பதிவான குற்றப்பத்திரிக்கை நகல்கள் ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக.எம்.பி.ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகியிருந்தனர்.

நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விசிக, காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்யக்கோரி கமிஷனரிடம் பாமகவினர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.