ETV Bharat / state

நீட் தேர்வுக்கு விலக்கு சட்டமுன்வடிவு - குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்புவதாக ஆளுநர் உறுதி - Exemption Bill for NEET Examination

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பவுள்ளதாக ஆளுநர் ரவி முதலமைச்சர் ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு
author img

By

Published : Mar 15, 2022, 1:40 PM IST

Updated : Mar 15, 2022, 7:46 PM IST

சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2021ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதியன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 142 நாள்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு

மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பதுடன், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என ஆளுநரிடம், முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சுற்றுலா செல்ல ரூ.1.25 கோடி செலவு செய்த எஸ்.பி.வேலுமணி : லஞ்ச ஒழிப்புத்துறை

Last Updated : Mar 15, 2022, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.