ETV Bharat / state

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' சென்னையில் விழிப்புணர்வுடன் போகி...!

இன்று போகிப் பண்டிகை நாளில் பொதுமக்கள் பழைய பொருள்களை எரித்து சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் விழிப்புணர்வுடன் உற்சாகமாக மேளங்கள் அடித்துக் கொண்டாடினர்.

author img

By

Published : Jan 13, 2022, 7:27 PM IST

சென்னையில்  போகி கொண்டாட்டம்
சென்னையில் போகி கொண்டாட்டம்

சென்னை: போகிப் பண்டிகை என்றாலே 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற பழமொழிதான் நம் நினைவிற்கு முதலில் வரும். போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள் முந்தைய நாள் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

பொங்கலுக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து வர்ணம் பூசுவார்கள். அப்போது வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களை அகற்றி போகிப் பண்டிகை நாளில் எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் மேளங்கள் அடித்து கொண்டாடுவார்கள்.

120 விமான சேவைகள் பாதிப்பு

பழைய பொருள்களை எரிக்கும்போது, மனத்தில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கி எரிய வேண்டும் என்பதே போகி பண்டிகையின் சிறப்பாகும். ஆனால் பழைய பொருள்களை எரிக்கும்போது, சிலர் பழைய டயர்கள், நெகிழி, ரப்பர் பொருள்களை எரிப்பதால் காற்று மாசடைந்து சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. இதைத் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள்.

சென்னையில் போகி கொண்டாட்டம்

மரத்தாலான பொருள்கள், உடைகள் போன்ற சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருல்களை மட்டுமே எரிக்க வேண்டும் எனப் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் மூலம் விளக்குகின்றனர்.

2018ஆம் ஆண்டு சென்னை, புறநகர்ப் பகுதியில் நெகிழி, டயர் பொருள்களை அதிகளவு எரித்ததால் கரும்புகை உடன் பனிமூட்டம் ஏற்பட்டு 120 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் கொண்டாட்டம்

இந்தநிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகாலை முதலே பழைய பொருள்களை எரித்து சிறுவர்கள் மேளங்கள் அடித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடினர். இதனால் அதிகாலையில் பனிப்பொழிவுடன் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு புகைமூட்டம் குறைவாக இருந்ததாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். போகி பண்டிகையான இன்று பொதுமக்கள் அனைவரும் 'நெகிழியை ஒழிப்போம்; நெகிழியை எரிக்க மாட்டோம்' என உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

உறுதிமொழி ஏற்போம்!

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் சந்தானம் கூறுகையில், "போகிப் பண்டிகையானது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளைச் சுத்தம் செய்து பழைய பொருள்கள், குப்பைகளை எரிப்பார்கள். கிராமப்புறங்களில் விவசாயிகள் மழை வேண்டி இந்திரனை வழிபடுவார்கள்.

பழைய உடைகள், பாய் போன்ற சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பொருள்களை எரிப்பதே வழக்கம். காலப்போக்கில் இதுமாறி நெகிழிப் பொருள்களை எரிக்கத் தொடங்கினர். சென்னை போன்ற பெருநகரங்களில் நெகிழி, டயர் போன்ற பொருள்களை அதிகளவில் எரித்தனர். இதை எரிப்பதன் மூலம் அதிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது சென்னை நகரில் நெகிழிப் பொருள்களை எரிப்பது குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனிவரும் காலங்களிலும் நெகிழியை ஒழிப்போம்; நெகிழியை எரிக்க மாட்டோம் எனப் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தாண்டு காற்று மாசு குறைவு

சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், "2018ஆம் ஆண்டு போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களுடன் நெகிழி, டயர்கள் போன்ற பொருள்களை எரித்ததால் சென்னை விமான நிலைய பகுதியில் கடும் புகை மண்டலம் சூழ்ந்து 118 விமானங்கள் புறப்பாடு, வருகை சேவை பாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு, விமான நிலைய ஆணையம் வைத்த பல்வேறு வேண்டுகோளுக்கு இணங்க நெகிழி, டயர் எரிப்பது ஓரளவிற்கு தற்போது குறைந்துள்ளது. இன்று போகிப் பண்டிகை நாளில் புகை குறைவாகத்தான் இருந்தது. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் எந்தப் பாதிப்பும் இன்றி இயங்கின" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.