ETV Bharat / state

School Announcement: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிய முறை - தமிழ்வழிச் சான்று பெற அலையும் நிலைக்கு முற்றுப்புள்ளி! - மருத்துவம், தொழிற்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு

நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் (10th public exam marksheet) புதிய முறை கொண்டுவரப்பட்டு, 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் படித்த பள்ளியின் (School) விவரம், பயிற்று மொழி ஆகியவை இடம் பெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
author img

By

Published : Nov 21, 2021, 6:35 PM IST

Updated : Nov 21, 2021, 6:56 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் நடப்பு கல்வியாண்டு (2021-22) முதல் மாற்றம் கொண்டு வரப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளதை செயல்படுத்துவதற்கு உதவிடும் வகையிலும் இந்தமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதற்காக தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதனை எளிதாக்கும் பொருட்டு 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் படித்த பள்ளியின் விவரம், பயிற்று மொழி ஆகியவை இடம் பெறும் வகையில், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் (10th Public Exam Marksheet) அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

அறிவிப்பு
அறிவிப்பு

மேலும் அரசுப் பள்ளிகளில் (Government school students) படித்த மாணவர்களுக்கு மருத்துவம், தொழிற்கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதற்கு மாணவர்களின் விவரங்களை எளிதில் சரிபார்ப்பதற்கு புதிய முறை உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20% இட ஒதுக்கீடு யாருக்கு?

தமிழ் வழியில் படித்தவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், கரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு என அனைத்தும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2021-2022ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, கல்வித்தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்களுக்குள் மேலும் சில விவரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அதில், மாணவரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு), மதம், மாணவரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மாற்றுத்திறனாளி வகை, செல்போன் எண், மாணவரின் வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்கள் பயன்படுத்தி பெயர்ப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால், அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், நாளை முதல் (22.11.2021) டிசம்பர் 4ஆம் தேதி வரையில் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அனைத்து மாணவர்களது விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதனையும், மாணவரின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் மற்றும் பாடத்தொகுப்பு ஆகிய விவரங்களையும் சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின், அதனை திருத்தவேண்டும்.

தேர்வு முடிவுகள் மாணவரது பெற்றோர், பாதுகாவலர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால், பதிவேற்றம் செய்யப்படும் செல்போன் எண் சரியானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழில் புதிய முறை

2021-2022ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பெண் சான்றிதழில், மாணவர் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் பயின்றார் என்ற விவரம் வகுப்பு வாரியாக பதிவு செய்து வழங்கப்படவுள்ளது.

எனவே, பள்ளித் தலைமையாசிரியர்கள் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் 1 முதல் 10 வரையிலான வகுப்பு ஒவ்வொன்றையும் எந்த பயிற்று மொழியில் பயின்றார் என்ற விவரத்தினையும் தனித்தனியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெயர்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், இப்பணியினை தலைமையாசிரியர் தமது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும்.

மொழிப்பாட விலக்கு, செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத் திறனாளிகள், விருப்ப மொழிப்பாடத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான தேதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்" என அதில் கூறிப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறையில் தற்பொழுது வரையில் வழங்கப்படும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்கள் கடைசியாக படித்தப் பள்ளியின் விவரம், பயிற்று மொழி தமிழ் அல்லது ஆங்கிலம் என மட்டுமே இருக்கும்.

தற்பொழுது புதிய மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் படித்தப் பள்ளியின் விவரம், பயிற்று மொழி ஆகியவை இடம் பெற உள்ளது.

மேலும் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவரின் பள்ளியின் பெயர், பயிற்று மொழி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே தமிழ் மொழியில் பயின்ற மாணவர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற இனிமேல் சிரமம் கொள்ளத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு நிச்சயம் திரும்பப் பெறப்படமாட்டாது' - அண்ணாமலை

Last Updated : Nov 21, 2021, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.