ETV Bharat / state

மக்களவை தேர்தல் பணிகள், கூட்டணி? மநீம துணைத் தலைவர் மெளரியா சிறப்பு நேர்காணல்! - MNM

பிக்பாஸ் மற்றும் விக்ரம் போன்றவை மூலம் கமல்ஹாசன் தொடர்ந்து மக்கள் மத்தியில் தனது இருப்பை வெளிக்காட்டி வருகிறார் என மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மெளரியா கூறியுள்ளார்.

மடைதிறக்குமா மக்கள் நீதி மய்யம்? - மெளரியுடன் சிறப்பு நேர்காணல்!

author img

By

Published : Dec 12, 2022, 1:22 PM IST

Updated : Dec 12, 2022, 3:58 PM IST

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் செய்து வரும் பணிகள் மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் மெளரியா ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மெளரியா உடன் சிறப்பு நேர்காணல்

கேள்வி - 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் எவ்வாறு தயாராகி வருகிறது?

பதில் - மூன்று தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததால் தொண்டர்கள் சோர்விழந்துள்ளனர். அவர்களை உத்வேகப்படுத்துவதற்குதான் இது போன்று மாவட்டமாக சென்று நாடாளுமன்ற தேர்தலுக்காக ஓராண்டு முன்பாகவே கூட்டங்கள் நடத்தி வருகிறோம். பல கட்சிகள் பல்வேறு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் பெரிய அளவில் சோர்வடையவில்லை.

அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாசன் தொடர்ந்து மக்கள் மத்தியில் இருப்பதுதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது வெளிவந்த விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனவே அவர் தொடர்ந்து மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டி வருகிறார்.

கேள்வி - இதுவரை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எது குறித்து ஆலோசிக்கப்பட்டது மற்றும் தொண்டர்களிடம் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?

பதில் - மாவட்டம் மாவட்டமாக சென்று மாவட்டச் செயலாளர் தலைமையில், அங்கு இருக்கும் அணிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது, அங்கு எத்தனை முகவர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் கருத்து இன்னும் மக்களிடையே சென்று சேரவில்லையோ என்ற ஐயம், இந்த கூட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

எனவே வீடு வீடாக சென்று எங்களது கருத்துகளை தெரிவிப்பதை இலக்காக தற்போது வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொகுதியும் எங்களுடைய கொள்கைகளை பிரசுரம் மூலம் வீடு வீடாக கொடுக்க இருக்கிறோம். குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு மக்களை சந்தித்துள்ளார்கள் என்பது குறித்து, அந்த மாவட்டச் செயலாளர் தலைமைக்கு அறிக்கை கொடுப்பார்கள்.

கேள்வி - மக்களை சென்றடைவதற்காக கால அளவு ஏதாவது இருக்கிறதா?

பதில் - தற்போது இருந்து கிராமம் கிராமமாக சென்றால்கூட நாங்கள் தேர்தல் வருவதற்குள் மூன்று முறை மக்களை சந்தித்து விடுவோம்.

கேள்வி - வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியில் சந்திக்க வாய்ப்புள்ளதா?

பதில் - கூட்டணியை குறித்து தலைவர் கமல்ஹாசன்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று நினைக்கிறோம்.

கேள்வி - தேர்தல் நேரத்தில் மட்டும் கமல்ஹாசன் மக்களை சந்திப்பதாகவும், மற்ற நேரங்களில் அரசியல் செய்வதில்லை என்றும் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார், யாரும் இங்கு முழு வேலை அரசியல்வாதி இல்லை என்று. அவர் செயல்பாடுகளை வைத்து நாங்கள் அரசியல்படுத்தி வருகிறோம். விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘உறவே உயிரே தமிழே’ என்றுதான் தனது பேச்சை தொடங்கினார்.

அங்கு மக்கள் நீதி மய்யம் அரசியல்தான் இருக்கிறது. அதேபோல் தற்போது கமல்ஹாசன் 234 (KH 234) என்று ஒரு போஸ்டர் வந்தது. அது தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளை குறிக்கும். எனவே அவர் செயல்பாடுகளை நாங்கள் அரசியல்படுத்தி வருகிறோம்.

கேள்வி - இந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட இலக்கு ஏதாவது இருக்கிறதா?

பதில் - குறிப்பிட்ட தொகுதியை மட்டும் குறி வைத்து எந்த செயல்பாடுகளும் நாங்கள் செய்யவில்லை. முதலில் மக்களைச் சென்றடைய வேண்டும். மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு கமல்ஹாசனிடம் தெரிவிப்போம். அவர்தான் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்.

இதையும் படிங்க: மக்கள் நீதிமய்யத்தில் மீண்டும் இணைந்த அருணாச்சலம்

Last Updated : Dec 12, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.