சென்னையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் கண்காணித்து வருகின்றனர்.
காய்ச்சல் அறிகுறி இல்லாதவர்களை மருத்துவக் குழுவினரும் காவல் துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் மூன்றாயிரம் பேர் வீடுகளில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இனிவரும் நாள்களில் பரிசோதனைக்காக மருத்துவக் குழுவினர் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அவர்களுடன் காவல் துறையினரும் பாதுகாப்பிற்குச் செல்லவேண்டிய நிலை உள்ளது.
அதனால், காவல் துறையினரின் தற்காப்புக்காக பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தலா மூன்று கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நடுரோட்டில் நடனமாடி தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு!