ETV Bharat / state

சசிகலா அதிமுகவை தனது குடும்பம் எனக் கூறுவது நகைப்பிற்குரியது - ஜெயக்குமார் - சென்னை அண்மைச் செய்திகள்

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத சசிகலா, அதிமுகவை தனது குடும்பம் எனக் கூறுவது நகைப்பிற்குரியது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
author img

By

Published : Jul 20, 2021, 8:49 PM IST

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மதுசூதனன் உடல்நிலை குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதுசூதனன் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அவர் மீண்டுவர வேண்டும் என்பதே அதிமுகவினரின் விருப்பம். அதிமுகவின் கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது.

உதயநிதி நிழல் முதலமைச்சரா?

உடல் நலமற்றவரைக் காணவருவது ஆரோக்கியமான விஷயம், சசிகலா மதுசூதனனைக் காணவந்ததை கொச்சைப்படுத்த முடியாது. ஜெயலலிதாவின் திருப்பெயரை, சசிகலா பயன்படுத்தக் கூடாது. அரசியலைவிட்டு ஒதுங்குவதாகக் கூறிய பிறகு, நெறிமாறாமல் இருப்பதே சசிகலாவிற்குச் சிறந்தது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று விழுக்காடு மட்டுமே திமுக-அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் ஆகும். தலைமைச் செயலகத்தில் உதயநிதியின் படத்தை சட்டத் துறை அமைச்சர் வைத்தது விதிமீறல். சட்ட அமைச்சர் வேண்டுமானால் தனது பூஜை அறையில் உதயநிதி படத்தை வைத்து பூஜை நடத்தட்டும். உதயநிதி முதலமைச்சரா, நிழல் முதலமைச்சரா? அவரது படம் சட்ட அமைச்சர் அறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன பெண்களுக்கு ரூ.1,000, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திமுகவின் 505 வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்து லட்சம் கோடி ரூபாய் வேண்டும்.

சசிகலா கூறுவது நகைப்பிற்குரியது

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத சசிகலா, அதிமுகவை தனது குடும்பம் எனக் கூறுவது நகைப்பிற்குரியது. 15 ஆண்டுகளாக காங்கிரஸ் முதுகில் ஏறி, திமுக சவாரி செய்ததைப்போல, பாஜக முதுகில் அதிமுக பயணிக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: ஜெ., பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது - பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.